வறுமையில் வாடிய தமிழ் தந்தையின் பேத்திக்கு உதவி கரம் நீட்டிய அதிமுக | Thanjavur | ADMK | Thanthi TV
தமிழ் தந்தை என போற்றப்படுகிற மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதா என்பவர் குடும்பத்துடன் தஞ்சாவூரில், வறுமையில் வசித்து வருகிறார். அவருக்கு வல்லம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மாதம் வீடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை, அதிமுக மாவட்ட செயலாளர் சேகர் வழங்கினார்.
Next Story
