நடிகர் விஜய்-64 படப்பிடிப்பால் மாணவர்கள் பாதிப்பு - விடுமுறை நாட்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி

நடிகர் விஜய் படப்பிடிப்பு சர்ச்சையை தொடர்ந்து பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் படப் பிடிப்புக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்-64 படப்பிடிப்பால் மாணவர்கள் பாதிப்பு - விடுமுறை நாட்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி
Published on

சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜயின் படப் பிடிப்பு கடந்த 3 நாட்களாக நடந்தது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியரிடம் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய ஆணையர் விசாரணை நடத்தினர். அப்போது, விஜய் சந்திக்காததால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானதாக கூறியுள்ளார். இதேபோல், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில், சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்றும், அவசிய தேவை ஏற்பட்டால், விடுமுறை நாட்களில் மட்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com