கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை பைபர் படகால் பரபரப்பு

x

கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை பைபர் படகு - பரபரப்பு

நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் ஆள் இல்லாத, இலங்கை பதிவு எண்ணுடன் புதிய பைபர் இஞ்சின் படகு ஒன்று, கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த வேதாரண்யம் போலீசார் விரைந்து சென்று படகை ஆய்வு செய்ததில், அதில் மீன்பிடி வலை, இஞ்சின் போன்றவை இருந்தன. மர்ம நபர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பார்களா? அல்லது இது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கியூ பிரிவு மற்றும் கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, படகு கரை ஒதுங்கிய இடம் காட்டுப்பகுதி என்பதால், யாராவது காட்டில் மறைந்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்