Tenkasi | Courtallam | Mondayம் குறையாத கூட்டம் | டூரிஸ்ட்களால் திணறும் குற்றாலம்

குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் - உற்சாக குளியல் வேலை நாளான இன்றும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தென்மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், குற்றால சீசன் களைகட்டியுள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து, அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். விடுமுறை நாள் அல்லாத போதிலும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் குற்றாலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com