நடுரோட்டில் கவிழ்ந்த இளநீர் லாரி - இளநீரை அள்ளி சென்ற மக்கள்.. பரபரப்பு வீடியோ

தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இளநீர் பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கீழே சிதறி கிடந்த இளநீரை அவ்வழியாக சென்றவர்கள் எடுத்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com