புதையலுக்காக சூறையாடப்பட்ட கோவில் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புதையல் இருப்பதாகக் கூறி பழமையான கோயில் சூறையாடப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோகிலப்பள்ளி கிராமத்தில் பழமையான விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இங்கு புதையல் இருப்பதாக வதந்தி பரவிய நிலையில், மர்ம நபர்கள் சிலர் புதையலை தேட குழி தோண்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த டூவீலர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
