Temple Festival | Ranipet | ஆடித் திருவிழா - அதிமுக நிர்வாகி எஸ்.எம்.சுகுமார் சாமி தரிசனம்
Temple Festival | Ranipet | ஆடித் திருவிழா - அதிமுக நிர்வாகி எஸ்.எம்.சுகுமார் சாமி தரிசனம்
ஆடித் திருவிழா - அதிமுக நிர்வாகி எஸ்.எம்.சுகுமார் சாமி தரிசனம்
ராணிப்பேட்டை மாவட்டம் படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழாவை ஒட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
வாலாஜாபேட்டையில் உள்ள படவேட்டம்மன் ஆலயத்தில், ஆடி மாதம் 4-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால் குடம் எடுக்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். மேலும் பக்தர்கள் ஏராளமானோர் அலகு குத்தியும், பால் குடங்கள் எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த திருவிழாவில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் தரிசனம் செய்த பிறகு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
