கோவில் திருவிழா..! இருதரப்பினர் கடும் தள்ளுமுள்ளு..! திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காளியம்மன் கோவில் சப்பரம் கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு கொண்டு வந்ததாக, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் 3 மணி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரதம் கோவிலுக்கு சென்றது.
Next Story
