மனிதர்கள் போல் பனங்கிழங்கை உரித்து உண்ணும் கோவில்யானை - பக்தர்கள் வியப்பு
திருச்செந்தூர் கோவில் யானை “தெய்வானை, மனிதர்கள் போல பனை கிழங்கை துதிக்கையால் தோலை உரித்து சுவைத்து உண்ணும் காட்சி வியப்படைய செய்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு தினமும் இரண்டு நேரம் சத்தான பயர்கள், சாதம் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. பகல் நேரங்களில் யானைக்கு நாற்று, தென்னங்கீற்று, கரும்பு, தர்பூசணி, தென்னம்பூ, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்படுகின்றன.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு அடி அளவிலான சிறிய பனைக்கிழங்கை, மனிதர்கள் செய்வது போல, அதன் மேல் தோலை துதிக்கையால் முற்றிலும் உரித்து, நடுப்பகுதியில் இருக்கும் குருத்தை அகற்றிய பின்பு சுவைத்துச் சாப்பிடுகிறது.
Next Story
