நாளை கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்

x

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலின் உட்பிரகாரம் செவ்வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளைய தினம் காலை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோயில் முழுவதும், வண்ண பூக்கள் மற்றும் செவ்வாழை மரங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்