"மாணவர்கள் கை கழுவ சோப்பு கொள்முதல் செய்ய வேண்டும்"- அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் சோப்பு வாங்கி வைக்க வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
"மாணவர்கள் கை கழுவ சோப்பு கொள்முதல் செய்ய வேண்டும்"- அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு
Published on
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் கைகளை சோப்பு போட்டுக் கழுவதற்கு தலைமையாசிரியர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோப்பினை வாங்குவதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக நிதி அல்லது சிறப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com