தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா - அக்னிசட்டி ஏந்தி ஊர்வலம் வந்த பக்தர்கள்

x

கோவையில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் துவங்கி ஒப்பணக்கார வீதி அவிநாசி மேம்பாலம் வழியாக ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்