இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதி - ஆளுநர்

தமிழக அரசு இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதி - ஆளுநர்
Published on

தமிழக அரசு இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 3 ஆயிரத்து 500ல் இருந்து 4 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

திறன் மேம்பாட்டுக்கு தமிழக அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது எனக் கூறிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இதற்காக அரசு ரூ. 683 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது எனக் கூறினார்.

தமிழக அரசு இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

கொரோனா காலத்திலும், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார்.

ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் தொடர 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com