Dhanush New Party? | "தமிழக எழுச்சிக் கழகம்" - புதிய கட்சி தொடங்கும் தனுஷ்? - தனுஷ் தரப்பு ரிப்ளை
#Dhanush #NewParty #DhanushFansMeet #ThanthiTV
Dhanush New Party? | "தமிழக எழுச்சிக் கழகம்" - புதிய கட்சி தொடங்கும் தனுஷ்? - அதிகாரப்பூர்வமாக தனுஷ் தரப்பு கொடுத்த ரிப்ளை நடிகர் தனுஷ் "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனுஷ் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை வலுப்படுத்துவதில் அண்மைக்காலமாக தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள அவர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து தனுஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்ற இருப்பதாகவும், அதற்காக சட்ட வல்லுநர்களுடன் தனுஷ் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் தனது ரசிகர் மன்றத்துக்கு "தமிழக எழுச்சிக் கழகம்" என பெயர் மாற்றி புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும், தமிழக எழுச்சி கழகத்தை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், தனுஷ் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
