Tambaram | அதிமுக பிரமுகருக்கு திமுக ஊராட்சி தலைவர் கொலை மிரட்டல் - சென்னையில் பரபரப்பு

x
  • அதிமுக பிரமுகருக்கு திமுக ஊராட்சி தலைவர் கொலை மிரட்டல் - பரபரப்பு
  • சென்னை தாம்பரம் அருகே அதிமுக பிரமுகருக்கு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அகரம் தென் ஊராட்சியில் திமுகவினர் முறைகேடாக SIR படிவங்களை பூர்த்தி செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். சமுதாய நலக்கூடத்தில் படிவங்களை பூர்த்தி செய்யும்போது திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திமுக ஊராட்சித் தலைவர் ஜெகன், அதிமுக பிரமுகர் ஆதி கேசவனை கொன்றுவிடுவேன் எனக் கூறினார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்