தாம்பரம் : டிரைவர் இல்லாமல் ஓடிய சொகுசு பேருந்து

டிரைவர் இல்லாமல் ஓடிய சொகுசு பேருந்து, வீட்டின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் : டிரைவர் இல்லாமல் ஓடிய சொகுசு பேருந்து
Published on
டிரைவர் இல்லாமல் ஓடிய சொகுசு பேருந்து, வீட்டின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், சென்னையை அடுத்த தாம்பரம் - கக்கன் தெருவில் மாலையில் நிகழ்ந்தது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சொகுசு பேருந்தின் டிரைவர் வள்ளி நாயகம், டீ குடிக்க பேருந்தை நிறுத்தி இருந்தபோது, தானாக ஓடி, அருகே இருந்த பீட்டர் என்பவர் வீட்டின் மதில் சுவரில் மோதியது. இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com