திடீர் ஆய்வு - முட்டைகளை பார்த்து ஷாக் ஆன உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

x

பள்ளிபாளையத்தில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை, புதன் சந்தை பகுதியில் உள்ள முட்டை கடையில் சுகாதாரமற்ற முறையில், முட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரங்கநாதன் தலைமையில் முட்டை கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோழி கழிவுகளுடன், ரத்த கரையுடன் சுகாதாரமற்ற முறையில் இருந்த 2400 முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்