திருடனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு வேலை

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடனை மடக்கிப்பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
திருடனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு வேலை
Published on

திருடனை மடக்கிப் பிடித்த சிறுவனுக்கு வேலை

சென்னை அண்ணாநகரில் கடந்த ஏப்ரல் மாதம் பெண் மருத்துவர் ஒருவரின் செயினை பறித்துச் சென்ற கொள்ளையனை அதே பகுதியை சேர்ந்த சிறுவன் சூர்யா மடக்கிப் பிடித்தான். கொள்ளையனை பிடித்ததோடு மருத்துவரின் செயினையும் அந்த சிறுவன் கைப்பற்றி அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான். சிறுவனின் இந்த செயலைக் கண்ட காவல்துறை அவனை பாராட்டி பரிசுகளும் வழங்கியது. அப்போது சிறுவன் சூர்யாவின் துணிச்சலான இந்த செயலை பாராட்டும் வகையில் உரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு மற்றவர்களை போல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தற்போது அது நிறைவேறி இருப்பதாகவும் நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் சூர்யா. 19 வயதை எட்டியுள்ள சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை சூர்யாவிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வழங்கினார். சூர்யாவுக்கு இது நிரந்தர வேலை என்பதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூர்யாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெகுமதியாகவே இதனை எடுத்துக் கொள்ளலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com