உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவின் பொறுப்புகளை நீக்கி, அவரை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இன்று மீண்டும் பொறுப்பேற்றார்.