மூழ்கிய கப்பல்... ``கரை ஒதுங்கும் பொருட்கள்..'' மீனவர்களுக்கு பறந்த வார்னிங்

x

கொச்சியில் மூழ்கிய கப்பலின் பொருட்கள் கரை ஒதுங்கினால் உடனடி தகவல் தெரிவிக்கும்படி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த 25ம் தேதி மூழ்கிய சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னர்கள் மற்றும் பொருட்கள் கரை ஒதுங்கும் அபாயம் உள்ளதாகவும், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால், அது கரையை நோக்கி நகரும் சாத்தியம் உள்ளதாகவும் கூறியுள்ளார். கரை ஒதுங்கும் பொருட்களை மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கையாளுவதை தவிர்க்க வேண்டும் என்றும், உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்