திருச்செங்கோட்டில் திடீர் சாலை மறியல்... மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கழிவுநீர் வாய்க்கால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரம்பம் முதலே சூரியன்பாளையம் பகுதி வழியாக அந்த கால்வாய் அமைக்கப்படக் கூடாது என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது சட்டையபுதூர் மற்றும் ராஜா கவுண்டம்பாளையம் பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கேட்டுக் கொண்ட நிலையில், மக்கள் நகராட்சியை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
Next Story
