MBBS - BDS படிக்க விரும்பும் மாணவர்களே... வெளியான முக்கிய அறிவிப்பு
எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்பிற்கு வரும் 25 தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு, இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 6 ந் தேதி துவங்கி நடைபெற்று வருவதாகவும். அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் மாற்றுத்திறனாளி சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
