HM | Students | School | தேர்வு எழுதாமல் ஓடி ஒளிந்த மாணவர்கள்- டூவீலரில் போய் தூக்கி வந்த HM
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் முழு ஆண்டுத் தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து, தேர்வு எழுத வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள், முழு ஆண்டுத் தேர்வு எழுத பள்ளிக்குச் செல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். அவர்களை தலைமை ஆசிரியர் சூசைராஜ் இருசக்கர வாகனத்தில் தேடிச் சென்று, தைல மரக்காடு மற்றும் கயிறு தொழிற்சாலையில் ஒளிந்திருந்து கொண்டிருந்தவர்களை கண்டுபிடித்து அழைத்து வந்து, தேர்வு எழுத வைத்தார்.
Next Story
