வளர்க்கும் நாயை மாணவர்களை வைத்து பராமரிக்க வைக்கும் தலைமை ஆசிரியை - நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

வீட்டில் வளர்க்கும் நாயை பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து பராமரிப்பு செய்ய வைத்த அரசுப்பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வளர்க்கும் நாயை மாணவர்களை வைத்து பராமரிக்க வைக்கும் தலைமை ஆசிரியை - நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
Published on
வீட்டில் வளர்க்கும் நாயை, பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து பராமரிப்பு செய்ய வைத்த அரசுப்பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களத்தில் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, வீட்டில் வளர்க்கும் நாயை பள்ளிக்கு கொண்டு வந்து, மாணவர்களை பராமரிக்க வைப்பதாக கூறப்படுகிறது. இதை வீடியே எடுத்து அப்பகுதி மக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தலைமையாசிரியை மீது, அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com