கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிளியனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 175 மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையினால் பள்ளி வளாகத்தை சுற்றி மழை நீர் மட்டுமின்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.