மண் அள்ளிய பள்ளத்தில் மாணவன் பலி - புகார் அளித்தவர்களை மிரட்டும் மண் மாஃபியாக்கள்..

x

திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டியில், மண் அள்ளத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண் மாபியாக்கள், புகார் அளித்தவர்களை மிரட்டுவதாக கூறி, மாணவனின் உறவினர்கள் வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவன் இறப்பிற்கு காரணமான கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் வராவிட்டால், மாணவனின் உடலை எங்களால் வாங்க முடியாது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்