ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட பொருட்கள் மீண்டும் ஒப்படைப்பு...

ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.
ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட பொருட்கள் மீண்டும் ஒப்படைப்பு...
Published on

ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. அதில் ரயில்வே காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் எல்லா ரயில்களிலும் சீருடை அணிந்த போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சாதாரண உடையில் இருக்கும் காவலர்களும் சந்தேகப்படும் வகையில் இருப்பவர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 54 சவரன் நகை மற்றும் 42 மொபைல் போன்களை பெற்றுக்கொண்டவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com