Thoothukudi Sterlite | ``ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’’ - தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - வியாபாரிகள் சங்கம்
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதின் காரணமாக, சிறு மற்றும் குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், காப்பர் கிடைக்காததின் காரணமாக, செலவு அதிகரித்து, மின்மோட்டார், டிரான்பார்மர் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறியுள்ளனர். தமிழக அரசு இது குறித்து சிறப்பு ஆணை பிறப்பித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
