ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - தீக்குளிக்க முயன்ற முதியவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் கண்மாய் நீர் வழி பாதை அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மக்களுக்கு ஆதரவாக விவசாயி மூர்த்தி என்பவர் திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதும் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மயக்கமடைந்த விவசாயியை ஆட்டோவில் ஏற்றி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பிறகு குடியிருப்புகளை அகற்றுவதற்கு 10 நாள் அவகாசம் கொடுத்து அங்கிருந்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - தீக்குளிக்க முயன்ற முதியவர்
Next Story
