தாயிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய தாய் மாமா

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞரை, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய தாய் மாமா
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞரை, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் இடையாபொட்டல் தெருவை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவரிடம், அவரது மகன் அங்குராஜ் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அங்குராஜின் தாய்மாமா லட்சுமணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த லட்சுமணன், அங்குராஜை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com