கருடன் மீதேறி பவனி வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்தாம் நாளில் ஐந்து கருட சேவை நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்த நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
