

உதகை கோடை சீசனையொட்டி, சிறப்பு மலை ரயில் இன்று முதல் தினசரி இயக்கப்படுகிறது. உதகை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 9 மணி 40 நிமிடம், 11 மணி 30 நிமிடம் மற்றும் மாலை 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. முதல் வகுப்பில் பயணிக்க 400 ரூபாய் கட்டணம், 2ஆம் வகுப்பில் பயணிக்க 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.நவீன வசதி கொண்ட சிறப்பு மலை ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள், இயற்கை காட்சிகள், தேயிலை தோட்டம், கேத்தி பள்ளத்தாக்கு ஆகியவை ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.