சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி- வியந்து பார்த்த வெளிநாட்டு வீரர்கள்
தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக மதுரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு
உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்காக வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள்
தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக மதுரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு, சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டியில் 100 காளைகள், 50 வீரர்கள் பங்கேற்றனர்
மதுரை சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு வீரர்களுக்காக மதுரை கீழக்கரை கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற உள்ளது.
அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பரளவில் கிரிக்கெட் மைதானம் போன்று முதல் முறையாக ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம் கட்டப்பட்ட ஆண்டுதோறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகள் முடிந்த பிறகு சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச ஜூனியர் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு ஹாக்கி அணி வீரர்களுக்காக, மதுரையின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது
சர்வதேச ஹாக்கி வீரர்களுக்கு மதுரையின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் 100 காளைகள் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
பங்களாதேஷ்,ஓமன்,சீனா, கனடா, ஆஸ்திரியா, நமீபியா,கொரியா,எகிப்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் நமது பாரம்பரியத்தை ஜல்லிக்கட்டு பற்றி தெரிந்து கொள்வதற்காக பிரத்தியேகமாக அவர்கள் பார்வைக்காக இந்த போட்டி இன்று நடத்த திட்டமிட்டப்பட்டு உள்ளது
ஹாக்கி வீரர்கள் நமது தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வருகை தந்துள்ளனர்.
