மதுகுடிக்க பணம் கேட்டு தராததால் ஆத்திரம் : தாயை வெட்டிக் கொன்ற மகன்

திருச்சி அருகே மதுகுடிக்க பணம் கேட்டும் தராத தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுகுடிக்க பணம் கேட்டு தராததால் ஆத்திரம் : தாயை வெட்டிக் கொன்ற மகன்
Published on
திருச்சி அருகே மதுகுடிக்க பணம் கேட்டும் தராத தாயை மகனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது மகன் ராஜாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து வாழ்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜா, தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜா, அரிவாளால் தன் தாயை வெட்டி கொலை செய்தார். இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com