உயர் கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு

அனைத்து வகையான உயர் கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு
Published on

உயர் கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு

அனைத்து வகையான உயர் கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திறனறிதல் தேர்வு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே கலை, அறிவியல் பாடப் பிரிவு உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.தொழிற்கல்வி படிப்புகளை படிக்கக் கூடிய மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் இந்த தேர்வு நடத்தப்படும் என்றும்,தற்போதுள்ள உயர் கல்வி அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உயர்கல்வி ஆணையம் என்ற அமைப்பு அமைக்கப்பட உள்ளதாகவும் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.அந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி படிப்புகளை ஒருங்கிணைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com