சீர்காழி : மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்

சீர்காழி அருகே மது அருந்த பணம் தராததால் மனைவியை தீ வைத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி : மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்
Published on
வள்ளூவக்குடியை சேர்ந்தவர் செந்தில். கொத்தனாரான இவர் கடந்த 25-ம் தேதி மது அருந்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவி மிரட்டியுள்ளார். ஆனால் திடீரென மனைவி மீது செந்தில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா நேற்று உயிரிழந்தார். இதனை அடுத்து கணவர் செந்திலை சீர்காழி போலீஸ் கைது செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com