Govt Land Fraud | 26 ஏக்கர் அரசு நிலத்தை வீட்டு மனையாக்கி மெகா மோசடி - கட்டு கட்டாக கைமாறிய பணம்

சிப்காட் அரசு நிலத்தை வீட்டுமனைகளாக விற்று பல லட்சம் மோசடி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிப்காட் அரசு நிலத்தை வீட்டுமனைகளாகக் கூறி விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட்டிற்குச் சொந்தமான 26 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி விற்றதாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமாற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்டோரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, நேரில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்தார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பெறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com