சிம்ஸ் பூங்காவில் பயணிகளை ஈர்க்கும் பச்சை ரோஜா...

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பச்சை வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சிம்ஸ் பூங்காவில் பயணிகளை ஈர்க்கும் பச்சை ரோஜா...
Published on
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பச்சை வண்ண ரோஜா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் தேர்வுகளில் முக்கிய இடம்பிடிக்கும் குன்னூர் பூங்காவில் முதன் முறையாக பச்சை வண்ண ரோசா செடி வளர்க்கப்பட்டுள்ளது. பிரத்யேக தொட்டியில் வளர்க்கப்பட்ட செடியில் மலர்ந்துள்ள பச்சை ரோஜா பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனால், பூங்கா முழுவதும் பச்சை ரோஜாவை நடவு செய்யும் முயற்சியில் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், வரவுள்ள கோடைகாலத்தில் நிறைய பயணிகளை ஈர்க்கவும் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com