குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தோட்டக்கலைதுறை சார்பில் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக மலர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பூமி பூஜை போடப்பட்டு, நாற்றுகள் நடும் பணி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பெபிதா தலைமையில் நடைபெற்றது. இதேபோல கோடை இறுதியில் நடைபெறும் பழ கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.