"சிபிஐக்கு மாற்ற வேண்டும்" - அதிமுக பரபரப்பு புகார்

x

நெல்லை மாவட்ட கனிமவளத் துறையில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், நடை சீட்டு வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கணேஷ் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அதில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குபதிய வேண்டும், கனிம வளங்களை சட்டவிரதமாக கேரளாவிற்கு கடத்துவதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிய கோரி நெல்லை எஸ்.பி., மற்றும் மாநகர காவல் ஆணையாளருக்கும் மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்