மாணவர்களை பல கி.மீ தண்ணீர் சுமக்க வைத்த பள்ளி..அதிர்ச்சி வீடியோ
திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை இரண்டு கிலோமீட்டர் சென்று சைக்கிளில் குடிநீர் எடுத்து வரச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தாடிக்கொம்பு அருகே மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவு சமைக்க தண்ணீர் இல்லாததால், மாணவர்களை தண்ணீர் எடுத்து வருமாறு பள்ளி தரப்பில் கூறியதாக தெரிகிறது . மாணவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு குடம் தண்ணீரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று கொண்டு வந்துள்ளனர். அப்போது சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்த சிறுவன் ஒருவன் கீழே விழுந்துள்ளான். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Next Story
