காவலர் வரதட்சணை சம்பவத்தில் பகீர் திருப்பம்

x

மதுரையில் போலீஸ்காரர் ஆன தனது கணவர் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி பெண் புகார் அளித்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த F.I.R-ல் குறிப்பிடப்பட்ட ஜூலை 16ஆம் தேதி சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதே நாளில் புகாரளித்த அப்பெண், உடலில் காயங்கள் இன்றி தனது குழந்தையுடன் ஷாப்பிங்கிற்கு நடந்து சென்று பின்பு ஆட்டோவில் திரும்பி வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

அப்பெண்ணின் புகாரில், அந்நாளில் தனது கணவர் தன்னை தாக்கியதாகவும், அவருக்கு தெரியாமல் அவரின் செல்போனில் தனது தந்தைக்கு தகவல் அளித்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டு இருந்தார். இந்த சூழலில், குறிப்பிட்ட இந்த இடைவெளியில் வேறு நபர்களிடம் செல்போன் வாங்கி, அவர் தந்தைக்கு தகவல் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இக்காட்சி அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்