உலுக்கிய தாராபுரம் விபத்து - பறந்த அதிரடி உத்தரவு
திருப்பூரில், பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் - மனைவி பலியான சம்பவத்தில் விளக்கம் தரக்கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தாராபுரத்தை அடுத்த குள்ளாய்பாளையம் பாலத்தில் தங்களது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நாகராஜ், ஆனந்தி தம்பதி அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இது குறித்து விரிவான அறிக்கையை, ஆறு வார காலத்தில் தாக்கல் செய்ய ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Next Story
