அதிர்ச்சி டீலிங் ஆடியோ வைரல் - மதுரை சுற்றுவட்டாரமே கொதிப்பில்..

x

மதுரையில் தனியார் அமைப்புகள் நடத்தக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளால் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான தொலைபேசி உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், டோக்கனுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்றும், பத்தாயிரம் கொடுத்தால் ஸ்பான்சர் என்ற பெயரில் ஐந்து டோக்கன் வழங்கப்படும் என்றும், மாட்டுக்கு 15 ஆயிரம் பரிசு என்று ஆசைவார்த்தை கூறி டோக்கன் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்