ராகு, கேது தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அதிர்ச்சி..
திருவாரூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். நாகை மாவட்டம் குறவப்புலத்தை சேர்ந்த 4 பேர் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருப்பாம்புரத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். திருவாரூர் தேரடி அருகே சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story
