

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன எலசகிரி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்து 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாஸ்கர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாஸ்கர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளி பாஸ்கருக்கு பாலியல் வன்கொடுமைக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.