Nilgiris LandSlide | ``சேவை ரத்து'' - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு
#Nilgiris #LandSlide #Train #ThanthiTV
Nilgiris LandSlide | ``சேவை ரத்து'' - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை வரும் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி பெய்த கனமழையால் ஹில் குரோவ் – குன்னூர் இடையே மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் மற்றும் மரங்கள் தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் கடந்த 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பெய்த கனமழையால் அடர்லி – ஹில் குரோவ் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் – ஊட்டி மற்றும் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
