எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி - பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி

x

நெல்லை, எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளியானது இந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில். எஸ்.ஏ.வி குரூப்ஸ் கல்வி நிறுவனமான பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், லஹைனா என்ற மாணவி 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதே போன்று 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பிரஜேஷ் குமார் என்ற மாணவர் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர்கள் திவாகரன், அஜேஸ் லால், பள்ளி முதல்வர்கள் சுடலையாண்டி பிள்ளை, பால பெஞ்சமின், பள்ளி நிர்வாகி பிந்துஜா மற்றும் பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்