

சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் மேற்கு வனப்பகுதியில் வேட்டையாட முயன்றதாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜடையன், மாதேஸ் மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.