கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்

சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்புற பள்ளி மாணவர்கள் : மயிலாட்டம், பறை இசை வாசித்து உற்சாகம்
Published on
சத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த இக்கரை நெகமம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள்,பகுத்தம்பாளையம் அரசு நடுநிலைப்பளிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு நடைபெற்ற அறிவியல் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கலந்துரையாடி மகிழ்ந்தனர். பின்னர் மாணவர்கள் பறை இசை வாசித்து உற்சாகப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com